புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ்!அல்லாக்கா தூக்கிய போலீஸ்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் அதிவேகமாக சென்றதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டின் போது இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதை தடுக்க காவல் துறையினர் கண்காணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தனர்.
சென்னை முழுவதும் எல்இடி விளக்குகள் பொருத்திய பேரிகார்டு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்கள் அதிவேகமாக சென்றதாக 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




