பாதுகாப்பு படையினர் அரசியலிலிருந்து விலகியே இருப்போம் என முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட பதவியான முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் இன்று பொறுப்பேற்றார்.
பின்னர் டெல்லியில் உள்ள தேசிய நினைவுச் சின்னத்தில் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார். அப்போது இராணுவத் தளபதி மனோஜ், விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் பதுரியா மற்றும் கடற்படை தளபதி கரம் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் முப்படைகளையும் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட வைப்பதே இலக்கு என்று கூறினார். பாதுகாப்பு படையினர் அரசியலில் இருந்து விலகி இருப்போம் என்று கூறிய பிபின் ராவத் ஆட்சியில் உள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை பின்பற்றுவோம் என தெரிவித்தார்.