பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைப்பு..!! 3-ந்தேதிக்குப் பதில் 4-ந் தேதி திறக்கப்படுகிறது..!!!

அரையாண்டு விடுமுறைக்குப் பின், 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 4-ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டு, ஜனவரி 2-ந் தேதி மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 2-ந் தேதி எண்ணப்பட உள்ளதால், பள்ளிகள் திறப்பு தேதி 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.

 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்கள் பெரும்பாலான பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளதாலும், 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை பணிகள் நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால், பள்ளிகள் திறப்பை 6-ந் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு, ஆசிரியர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. மேலும் ஆசிரியர்களும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதால் அதனை ஈடு செய்ய விடுமுறையை நீடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 

இதனால், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போயுள்ளது. ஜனவரி 3-ந் தேதிக்குப் பதிலாக 4-ந் தேதி சனிக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


Leave a Reply