மத்திய பிரதேசத்தில் சீருடை அணியாத காவலர்கள் இருவர் சிறுவனை தாக்கும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.
தாமோஹ் என்ற பகுதியில் பரவிய இந்த வீடியோவில் காவலர்கள் முன்னிலையில் சீருடை அணியாத காவலர்கள் இருவர் சிறுவனை கம்பால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ பரவிய நிலையில் சிறுவனை தாக்கும் காவலர்கள் யாரென்று அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கமல்நாத் உத்தரவிட்டுள்ளார்.