உலகின் மிகப்பிரபலமான இளம்பெண் மலாலா: ஐ.நா சபை கவுரவம்
உலகின் மிகவும் பிரபலமான இளம்பெண்ணாக பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய் ஐநா சபை தேர்வு செய்துள்ளது. பெண் கல்விக்காக போராடிய மலாலாவை கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.
இந்த தாக்குதலில் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் உயிர்தப்பிய அவருக்கு 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு மலாலா அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உலகின் பிரபலமானவராக மலாலா அறியப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




