--- --:--:-- --

பிரதமர் மோடி கூறியது பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டேன்: ராகுல் காந்தி

2

தடுப்பு முகாம்களில் ஏதுமில்லை என்று பிரதமர் மோடி கூறியது பொய் என்பதை தாம் அம்பலப்படுத்தி விட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

 

காங்கிரஸ் கட்சியை 135 ஆவது நிறுவன தின கொண்டாட்டத்தை ஒட்டி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகதிகள் தடுப்பு முகாம் இல்லை என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில், அவற்றின் காட்சிகளைத்தான் வெளியிட்டிருப்பதன் மூலம் யார் பொய் கூறுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் தடுப்பு முகாம்கள் இல்லை என்று பிரதமர் மோடி கூறிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி அத்துடன் தடுப்பு முகாம்களில் படங்களையும் சேர்த்து வெளியிட்டுள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கேடு ஆகிய அனைத்துமே ஏழைகள் மீதான சுமைதான் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதில் ராகுல் காந்தி பொய் சொல்வதாக பாரதிய ஜனதா குற்றம் சாட்டி இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon