--- --:--:-- --

மது போதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

10

சென்னையில் மதுபோதைக்காக தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து சிசிடிவி கேமராவை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

இதில் சைதாப்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் அவர் மது போதை மட்டுமே இரு சக்கர வாகனத்தை தேடி வந்தது தெரியவந்தது.

 

வாகனத்தில் உள்ள உதிரிபாகங்கள் பழைய இரும்பு கடைகளில் விற்று மது அருந்தி வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் இருந்து 14 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon