திருவள்ளூர் வாக்குச்சாவடியில் குழப்பம்: மீண்டும் மறு வாக்குச்சீட்டு விநியோகம்

வாக்குச்சீட்டில் முத்திரை இடும்போது சின்னங்களில் மை தெரிந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்த பின்னர் முத்திரையிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மூலம் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முழுவதும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சுமுகமாக அமைதியாக நடைபெற்று வருவதாக கூறினார்.

 

ஒரு சில இடங்களில் சிறிய சிறிய குறைபாடுகள் இருப்பதாக புகார்கள் வந்ததாகவும், உடனடியாக குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாகவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Leave a Reply