அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர் : திமுகவின் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு விமர்சனம்
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு காமெடி நடிகர் என திமுகவின் முன்னாள் அமைச்சர் ஏ.வ வேலு விமர்சித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம் கூடலூர் ஊராட்சி மன்ற தேர்தலில் வாக்கு பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய கிரகணம் வருவது போல், திமுகவும் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமாரை காமெடி நடிகர் என்றும் அதிமுக அமைச்சர்கள் அலிபாபாவும் 33 திருடர்களும் என்று விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




