உள்ளாட்சித் தேர்தல்: தருமபுரியில் வீடு வீடாக சென்று பணம் விநியோகம்…! – வீடியோ காட்சி

தர்மபுரியை அடுத்த இந்தூர் பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதாக புகார் வந்திருக்கிறது.

 

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி பாப்பம்பட்டி, கடத்தூர், அரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கு நாளை முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

 

நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலவாடி,இந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு 300 முதல் 500 ரூபாய் வரை பணம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.


Leave a Reply