--- --:--:-- --

வன்முறையை நோக்கி வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல

14

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மக்களை வன்முறைக்கு அழைத்து செல்வது தலைமைப் பண்பின் அடையாளம் அல்ல என்று இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருக்கிறார்.

 

சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர் கூட்டத்திலிருந்து தான் தலைவர்கள் உருவாகினார்கள் என்று கூறினார். எனினும் மக்களை பொருத்தமற்ற திசையில் வழி நடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

 

மாணவர்கள் நடத்தும் போராட்டங்களை சுட்டிக்காட்டிப் பேசிய ராணுவ தளபதி பிபின் ராவத் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நோக்கி மக்களை அழைத்து செல்வது நல்ல தலைமைப் பண்பாக அமையாது என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon