மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்

சென்னை புழலில் குடும்ப பிரச்சனையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் வெற்றிவீரன்.

 

இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ஆறு ஆண்டுகளாக தாயார் வீட்டில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் சமரசம் பேசிய வெற்றிவீரன் தனது வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 

இரவு முழுவதும் கடும் வாக்குவாதம் நீடித்த நிலையில் அதிகாலையில் சமையல் கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்த வெற்றிவீரன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


Leave a Reply