‘அரசியல் பழிவாங்கும் செயல்’: மரண தண்டனை குறித்து முஷாரப் கருத்து

தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு ஆதரவளித்ததற்காக பாகிஸ்தான் ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

 

நீதிமன்ற விசாரணையின் போது தமது வழக்கறிஞருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் திரும்புவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

 

முஷரப் ஆட்சி காலத்தின் போது அவசர நிலையை அமல்படுத்தியதற்காக அவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. உடல்நலக்குறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் முஷரப் சிகிச்சை பெற்று வருகிறார்.


2 thoughts on “‘அரசியல் பழிவாங்கும் செயல்’: மரண தண்டனை குறித்து முஷாரப் கருத்து

  1. Pingback: Masum

Leave a Reply