ஆபாச படம் -சென்னையில் 30 பேர் கொண்ட பட்டியல் தயார்!

சென்னையில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த 30 பேர் கொண்ட பட்டியலை சென்னை போலீசாருக்கு வழங்கியுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் காவலர் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஏடிஜிபி ரவி காவலர் செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தாலும் நான்கு லட்சம் பேர் தான் தங்களுடைய முழு தகவல்களையும் பதிவேற்றி உள்ளனர் என்றார்.

 

தவறான நோக்கில் யாரேனும் செயல்பட்டால் கொலை செய்யவும் தயங்க வேண்டாம் எனவும், அது தற்காப்பு தான் என்றும் மாணவிகளிடம் ஏடிஜிபி ரவி தெரிவித்தார்.


Leave a Reply