உலக நாடுகளின் இந்துக்களை திருப்பி அனுப்பினால், இந்தியா ஏற்குமா..?

உலகின் பல்வேறு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ நாடுகளில் இருக்கும் ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டால் இந்தியா அந்த முடிவை ஏற்குமா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான் திபெத்தியருக்கு குடியுரிமை கொடுக்கப்படும் போது இலங்கை தமிழர்களுக்கு கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.


Leave a Reply