தர்பார் படவிழாவில் தெரிவித்த கருத்தால் நாம் தமிழர் கட்சியினருடன் மோதல் ஏற்பட்ட நிலையில் தனியாக ஒரு அமைப்பை தொடங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதுவரை தம்மை அவதூறாகப் பேசி கொண்டிருந்தார்கள், தற்போது தமது தாய், தந்தையரை பற்றியும் மிகவும் தவறாக பேசுவதாக வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் மொழியை ஒரு போர்வையாக பயன்படுத்திக்கொண்டது தம்மை தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும் எனவும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தனி மனிதனாய் நின்று அன்பு தான் தமிழ் என்கிற வகையில் அரசியல் சார்பற்ற ஒரு சேவை அமைப்பை தொடங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தவறாக பேசி கொண்டிருப்பவர்களும் அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் எனவும் அந்த பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.