ஆண்டிபட்டி அருகே ஒரே ஒரு மாணவனுக்காக செயல்படும் அரசுப் பள்ளி

ஆண்டிபட்டி அருகே 2 ஆசிரியர்கள் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒரே ஒரு மாணவி மட்டும் பயின்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் பசுமலைதேரி என்ற கிராமம் உள்ளது.

 

அங்குள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து தற்போது ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். ஒன்றாம் வகுப்பு பயிலும் லிங்கேஸ்வரி என்ற அந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவி ஆசிரியர் பாடம் நடத்தி வருகின்றனர்.

 

இந்த பள்ளியில் சத்துணவு, போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கடமலைக்குண்டு, வருஷநாடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் அந்த பகுதி மக்கள் குழந்தைகளை சேர்ப்பதாக கூறப்பட்டது. எனவே ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் போதிய வசதிகளை ஏற்படுத்தி அரசு பள்ளிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply