பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதை தவிர்த்து விடுங்கள்

சபரிமலை ஐயப்பனை அனைவரும் தரிசிக்கலாம் எனவும் ஆனால் மனதில் கெட்ட எண்ணங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

 

சென்னை தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து செல்கின்றனர் என்றும், முன்பெல்லாம் சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் பக்தர்களை அவர்களது வீட்டில் உள்ள பெண்கள் கூட பார்க்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

 

ஆனால் தற்போது காலம் மாறி விட்ட நிலையில் பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் தெரிவித்தார். எனவே சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டே யேசுதாஸ் பிற கோவில்களுக்கு பெண்கள் செல்லலாம் என தெரிவித்தார்.


Leave a Reply