சென்னையை அடுத்த குன்றத்தூரில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விருகம்பாக்கம் நடேசன் நகர் தெருவைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் மருத்துவமனை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வண்டலூரில் தனது பணியை முடித்துவிட்டு வண்டலூர் மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் சென்று கொண்டிருந்தார். குன்றத்தூர் அருகே சாலையோர டீ கடைக்குச் செல்ல லோகநாதன் தனது இரு சக்கர வாகனத்தை திருப்பினார். அப்போது எதிரே வந்த கார் இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் காரை விட்டு விட்டு தப்பியோடினார். விரைந்து சென்ற போலீசார் லோகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.