--- --:--:-- --

ஜாமீன் கிடைத்தும் அழைத்துச் செல்ல யாரும் வரல…! 5 நாளாக அனாதையாக தவித்த பேராசிரியை நிர்மலாதேவி!!

IMG-20191210-WA0090

மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு 5 நாட்களுக்கு முன்னரே ஜாமீன் கிடைத்தும் உத்தரவாதம் கொடுக்க யாரும் முன்வராததால் சிறையிலேயே தவித்த நிலையில், இன்று சொந்த ஜாமீனில் விடுதலையானார்.

 

கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியை நிர்மலாதேவி, ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமீனில் வெளியான நிர்மலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.

 

இடைப்பட்ட காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டது போன்றும் காணப்பட்டு வந்த அவர், திடீரென மாயமானார். இதனால் கடந்த மாதம் 18-ந் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

 

இதனால் அடுத்து  சிலநாட்களில் நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில், நிர்மலாதேவி ஜாமீன் கேட்க, இனிமேல் வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், கடந்த 5-ந் தேதி அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், நிர்மலாதேவிக்கு உத்தரவாதம் கொடுத்து அவரை அழைத்துச் செல்ல உறவினர்களோ, நண்பர்களோ யாரும் முன்வரவில்லை.

 

இதனால்கடந்த 5 நாட்களாக சிறையில் தவித்த நிர்மலாதேவி, இன்று சொந்த ஜாமீனில் மதுரை சிறையிலிருந்து வெளிவந்து, தன்னந்தனியாக வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon