“திருச்செந்தூர் கோயிலில் காதலருடன் தரிசனம் செய்த நயன்தாரா” – ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு!!

முன்னணி நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த ஜோடியைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா, அவரையே விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

இதனால் சமீப காலமாக இருவரும் ஜோடியாகவே கோவில், கோவிலாக சென்று வருகின்றனர். காஞ்சியில் அத்திவரதர் தரிசன காட்சியை நள்ளிரவில் விக்னேஷ் சிவனுடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து திருப்பதி ஏழுமலையானையும் இருவரும் தரிசனம் செய்தனர்.

 

தற்போது மூக்குத்தி அம்மன் என்னும் பக்திப் படத்தில் நடிக்கும் நயன்தாரா விரதம் மேற்கொண்டு வருகிறார். இதனால், நேற்று கன்னியாகுமரி சென்ற நயன்தாரா, அங்கு பகவதி அம்மன் கோவிலில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

 

திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு,இன்று காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் வந்த நயன்தாரா, புகழ் பெற்ற முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பேட்டரி காரில் சென்று முருகனை வழிபட்ட இருவரையும் காண ரசிகர்கள் மட்டுமின்றி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply