பாலியல் புகார் – ஆசிரியருக்கு அடி உதை

நாகர்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

நாகர்கோவில் இடலாக்குடி பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தற்காலிக ஆசிரியரான சுரேஷ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பொதுமக்கள் திரண்டு அந்த ஆசிரியரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

போலீசார் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அந்த பகுதி மக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் சுரேஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்காக இந்த சம்பவம் குறித்து போலீசார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Leave a Reply