திருவண்ணாமலை : பக்தர்கள் இதை கொண்டு வந்தால் தங்கம் பரிசு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வரும் பக்தர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி அல்லது சணல் பைகளை கொண்டு வந்தால் தங்கம் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் துணிப்பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு கூப்பன் வழங்கப்படும் என்றும், கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12 பேருக்கு 2 கிராம் தங்க நாணயங்களும், 72 பேருக்கு 10 கிராம் வெள்ளி நாணயங்களும் பரிசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




