--- --:--:-- --

உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி இன்று மாலை வெளியாக வாய்ப்பு?

7

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது புதிய தேர்தல் அட்டவணை வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

மேலும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்களை நியமிப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகள் வைத்த கோரிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று மாலை உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அப்போது புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர 9 மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon