இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை மூலம் கோபிசெட்டிபாளையத்தில் தம்பதியர் 2,000 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ராஜதுரை, ஸ்வேதா தம்பதியினர் தங்களது நண்பர்களுடன் இணைந்து கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த கங்காதரன் என்பவரிடம் சுமார் மூன்று லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.
ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ராஜதுரை, ஸ்வேதா தம்பதியினர் கூறிய ஆசை வார்த்தையை நம்பி கங்காதரன் பணம் வழங்கியுள்ளார். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் சுமார் 2,000 கோடி ரூபாய் வரை ராஜதுரை, ஸ்வேதா தம்பதியினர் பெற்று அவற்றை பிட்காயின் முதலீடு செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கங்காதரன் உட்பட பணம் கொடுத்தவர்கள் பலர் ராஜதுரை, ஸ்வேதா தம்பதியினர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.