ஹைதராபாத்தில் இன்று மே. இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா மற்றும் மேல் இந்திய தீவுகள் அணிகளுக் இடையேயான முதலாவது டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று தொடங்குகிறது. சமீப காலமாக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இன்றைய போட்டியிலும் சாதிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி, 3 டி 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

 

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்றாலும்,டெஸ்ட், ஒரு நாள் , டி20 போட்டி என மூன்று வித போட்டிகளிலும், இந்த ஆண்டில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. கடந்த ஜூலை,ஆகஸ்ட் மாதம் மே.இந்திய தீவுகள் பயணத்திலும் அந்த அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.

 

இந்நிலையில் தற்போது மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.போலார்டு தலைமையிலான மே. இ.தீவுகள் அணி, இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் முதலாவது டி20 போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால், சொந்த மண்ணில் இந்தியாவிடம் பெற்ற படுதோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற மே.இ.தீவுகள் அணி முனைப்பு காட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ள கோஹ்லி தலைமையிலான பலம் மிக்க இந்திய அணியும் தனது வெற்றிப் பயணத்தை தொடரும் என்றே தெரிகிறது.


Leave a Reply