ராகுல் காந்தியின் உரையை சிறப்பாக மொழிபெயர்த்த மாணவி ஃபாத்திமாவுக்கு குவியும் பாராட்டுகள்

கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழிபெயர்த்த மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

மலப்புறத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி தான் பேசுவதை மாணவர்கள் யாரேனும் மொழிபெயர்க்க விரும்புகிறீர்களா என கூட்டத்தை நோக்கி கேட்டார். இதற்கு 11 ஆம் வகுப்பு பயிலும் ஃபாத்திமா என்ற மாணவி கையை உயர்த்தி தான் தயார் என கூறினார்.

 

அவரை மேடைக்கு அழைத்த ராகுல் காந்தி தனது உரையைத் தொடங்கினார். அவர் பேசியதை அந்த மாணவி மலையாளத்தில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்தார். மாணவிக்கு சாக்லேட் அள்ளித்து ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்த நிலையில், பலரும் மொழிபெயர்ப்பு பணியை சிறப்பாக செய்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.


Leave a Reply