வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோதே தனது கணவர் தீயில் சிக்கியதாக பெண் கண்ணீர் மல்க பேட்டி

சூடான் விபத்து சம்பவத்தில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தனது கணவர் தீயில் சிக்கியதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சூடானின் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

இதில் பண்ருட்டியை அடுத்த மாரடி குப்பம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவரும் தீ விபத்தில் சிக்கி பலியானார். அவரது உடலை தாயகம் கொண்டுவர வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ராஜசேகரின் மனைவி கலை சுந்தரியும் மனு அளித்துள்ளார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சம்பவத்தன்று தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அவரது அலறல் சத்தம் மட்டுமே கேட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

 

சூடானில் உள்ள இந்திய தூதரகத்தில் விசாரித்தபோது ராஜசேகர் பணிபுரிந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்ததாக கூறி அவரது உறவினர்கள் ராஜசேகரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


Leave a Reply