நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நிர்மலா தேதி விசாரணைக்கு ஆஜராகாததால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

 

மேலும் பிடிவாரன்ட் பிறப்பித்ததையடுத்து சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்க கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

மனுவை விசாரித்த நீதிபதி மகாராஜன் வழக்கு விசாரணைக்கு தவறாமல் ஆஜராக வேண்டும் என்று கூறி திருமண தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்கிடையே நிர்மலாதேவி சிறையில் கடுமையாக தாக்கப்படுவதாக அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.


Leave a Reply