திருவாடானையில் மின் கம்பி அறுந்து விழுந்து வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டி எரிந்து நாசம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதிநகரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் வீரமணி(50) என்பவர் பெட்டிக்கட்டை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் முன்பு இரவு மின் கம்பி அறுந்து இவரது வீட்டிற்கு மின்சாரம் செல்லும் வயர் மீது விழுந்ததால் மின்சாரம் பாய்ந்து வீட்டிநுள் வைத்திருந்த குளிர்சாதனப் பெட்டி எறிந்து நாசமானது. இதிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் நாசமானது. நல்வாய்பாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


Leave a Reply