நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு திருவாடானை கிழக்கு ஒன்றியம் சார்பில் மீனவர்களுக்கு தோள் கொடுப்போம் எனும் தலைப்பில் அரசு பள்ளியில் மர கன்று நடுதல், 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மீனவர்களுக்கு புத்தாடை, வலை மற்றும் உபகரணங்கள் வழங்குவது மற்றும் மன்ற பலகை திறப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் தலைமை வகித்தார்.
இனை செயலாளர் செந்தில்வேல்பிரபு முன்னிலை வகித்தனர். நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர் செந்தில் செல்வானந்த் பேசு கையில், மீனவர்களின் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க ரஜினியால் மட்டுமே முடியும் எனவும் வரும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான பிறகு விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரட்சனைகளை தீர்ப்பதில் மட்டுமே ரஜினி முக்கியத்தும் அளிப்பார் என்றும் கூறினார். ஒன்றிய செலாளர் காளிதாஸ், இனை செயலாளர் கண்ணன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.