பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா.. வருமானவரி சோதனையில் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த வருமான வரி சோதனையில் அங்கு பெண்களின் கழிவறையில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. சென்னை அடையாறில் இறால் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். அங்கு பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் சோதனையிட்ட அதிகாரிகள் அவர்களின் லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

 

மூன்றாவது நாளாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அந்நிறுவனம் ஊழியரான செந்தில்குமார் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்த விசாரணையில் செந்தில்குமாரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லாப்டாப்பில் கழிவறையில் பெண்கள் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன.

 

அலுவலகத்தில் இருக்கும் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராக்கள் வைத்து பெண் ஊழியர்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

செந்தில்குமார் தான் கழிவறையில் ரகசிய கேமிராவை பொருத்தினாரா? அவர்களது அந்தரங்க வீடியோக்கள் வந்தது எப்படி? இதற்குப் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? என்று பல்வேறு கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply