கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழையின் எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பாதிப்பிற்கு ஏற்ப கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவள்ளூர், தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுவையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுக்காக்களில் இன்று விடுமுறை.


Leave a Reply