குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் வேதனை
நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாநிலங்களவையில் பெண் உறுப்பினர்கள் பேசினர்.
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தி வந்தார்கள்.
பெண் மருத்துவரின் இறப்புக்கு அரசு சரியான பதில் சொல்ல வேண்டும் என கூறிய ஜெயாவசன் இதுபோன்ற குற்றவாளிகளை பொது வெளியில் நிற்க வைத்துக் கொல்லவேண்டும் என ஆவேசமாக குறிப்பிட்டார்.
அப்போது பேசிய அதிமுக எம்பி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றும் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரையும் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் தூக்கிலிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விவாதத்தின் போது பேசிய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு இது போன்ற குற்றங்களை தடுக்க போதிய சட்டங்கள் இருப்பதாகவும், அதை செயல்படுத்தும் துணிவும் நிர்வாகத் திறனும் இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். சமூகத்தில் மன மாற்றம் ஏற்பட்டால் இதுபோன்ற கொடுமையை தடுத்து விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




