காதல் திருமணம் செய்த இளைஞர் நண்பர்கள் மூலம் தலை துண்டித்துக் கொலை

திருநெல்வேலி அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த பெண்ணின் சகோதரர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜனக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரது மகள் வான்மதியும் கடந்த மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் வான்மதியை நம்பிராஜன் காதல் திருமணம் செய்துகொண்டது ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.

 

பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர தகராறில் ஈடுபட மாட்டோம் என ஊர் பெரியவர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் இரு குடும்பத்தினரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி டவுன் அருகே உள்ள மணி புறத்தில் நம்பிராஜன் வான்மதியும் வாழ்ந்துவந்தனர்.

 

கடந்த 25ஆம் தேதி இரவு நம்பிராஜனை அவரது நண்பர்கள் முத்துப்பாண்டி மற்றும் செல்லதுரை ஆகியோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அன்று இரவு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நம்பிராஜன் சடலமாக மீட்கப்பட்டார்.

 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நம்பிராஜனை நண்பர்களே கொலை செய்தது தெரியவந்தது. அதனடிப்படையில் வான்மதி சகோதரர் செல்ல சாமி ,செல்லதுரை, முத்துப்பாண்டி, லெஃப்ட் முருகன் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

காதல் திருமணம் செய்ததால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply