6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவுப் பாதையில் இந்திய பொருளாதாரம்!

நாட்டில் பொருளாதார வளர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் 4.5 சதவீத அளவிற்கு சரிவடைந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது தெரியவந்துள்ளது.

 

இதற்கு முன் கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் பதிவான 4.3 சதவீத அளவிற்கு வளர்ச்சி விகிதம் இருந்ததை மிகவும் குறைவானதாக இருந்தது.

 

2018, 2019 ஆம் ஆண்டுக்கான காலாண்டில் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7 சதவீத அளவிற்கு இருந்தது. இதேபோல் 8 முக்கிய தொழில் துறைகளில் வளர்ச்சி விகிதம் கடந்த அக்டோபர் மாதத்தில் 5.8 சதவீதமாக குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply