இன்னும் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழக கடற்கரைகளை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் சூறாவளி காற்று வீசுவதால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதேபோல் தென்மேற்கு வங்க கடல், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு நாளை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.


Leave a Reply