25 பேரை கடித்து குதறிய வெறிநாய்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வெறிநாய் கடித்ததில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவழங்குடி கிராமத்தில் சுற்றித்திரியும் வெறிநாய் ஒன்று சாலையில் சில நபர்களை கடித்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

அந்த நாய் கடித்ததில் சிறுவர்கள் உட்பட 25 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் அந்த வெறி நாயை பிடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply