படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அருகே போதியளவு பேருந்து இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

 

இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளில் அளவுக்கதிகமானோர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தினமும் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

 

இதனால் உடனடியாக அந்த வழித்தடத்தில் போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply