1 லிட்டர் பாலில் 1 வாளி தண்ணீர் கலப்பு?

உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் பாலில் அதிகளவு தண்ணீர் கலக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சோன்பத்ராவில் உள்ள சாலை பான்கார்டு தொடக்கப்பள்ளியில் ஒரு லிட்டர் பாலில் ஒரு வாளித் தண்ணீர் கலக்கப்பட்டு மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து பள்ளியின் ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தண்ணீர் கலக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர். பாலில் அதிக அளவு தண்ணீர் கலந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply