விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர்கள் வாகனங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

விருகம்பாக்கத்தில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றி திரிவதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத கும்பல் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது.

 

மேலும் அண்மைக்காலமாக காந்திநகர் பகுதியில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் அந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.காந்தி நகர்ப்பகுதிகளில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Leave a Reply