சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்து மீது காலணி வீச்சு!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர் அமராவதியில் நடைபெற்றுவரும் கட்டமைப்பு பணிகளை ஆய்வு செய்ய தனது ஆதரவாளர்களுடன் சந்திரபாபுநாயுடு பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் ஒய்‌எஸ்‌ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சிலர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடா பாலம் என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இருந்த சந்திரபாபு நாயுடு மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் அங்கு திரண்ட போராட்டக்காரர்கள் பேருந்தை முன்னேறி செல்ல முடியாத வகையில் தடுத்து நிறுத்தி சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Leave a Reply