ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையில் வோளாண்மை உதவி திட்ட இயக்குநர் அலுவலகம் சார்பில் வேளாண்மை, வேளாண்முகமை (ATMA) மற்றும் விரிவாக்க சீரமைப்பு திட்டம்(SSEPERS) பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தெருக் கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாடானை வேளாண்மை உதவி திட்ட இயக்குநர் கருப்பையா தலைமையில் பேருந்து நிலையத்திலும் மற்றும் விவசாயிகள் அதிகம் கூடும் இடமான தென் கிழக்கு தெருவில் நடைபெற்றது.
இந்த கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகள், பிரதம மந்திரி விசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் பற்றியும், இந்த ஓய்வூதியத்திட்டத்தில் விவசாயிகள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 60 வயதுவரை தாங்கள் தேர்ந்தெடுக்கும் தொகையினை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டினால் வயதான காலத்தில் 3000 ரூபாய் பென்சனாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு ப்ரிமியம் கட்டும் விவசாயி இடையில் இறக்க நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையும், பென்சனாக மாதம் ரூ 1500 ம் திட்டத்தில் வாரிசாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என கலை நிகழ்ச்சி மூலம் தெரிவிக்கப்பட்டது.
விவசாய கருவிகள் , ஊடு பயிர்கள், தெளிப்பு பாசனம், மற்றும் உழவு மானியம், விதைப்பு மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் விவசாயிகளுக்கான மானாவாரி மேம்பாட்டு திட்டம் பற்றிய விளக்க கையேட்டை அலுவர் சூர்யா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் இளையராஜா, கார்த்திகா மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.