--- --:--:-- --

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

13

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து கூடுதலாக 360 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிகிறது.

 

இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலின் உள் பகுதியிலும் அனைத்து நுழைவு வாயில்களிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூடுதலாக 360 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon