--- --:--:-- --

அஜித் பெயரில் கட்சி : ரசிகர் வெளியிட்ட போஸ்டரால் பரபரப்பு

16

நடிகர் அஜீத் பெயரில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அவரது ரசிகர் ஒருவர் போஸ்டர் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவர் அஜீத் திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அந்த கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் மதுரையில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

 

இதுதொடர்பாக அவர் உருவாக்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் வைரல் ஆகியது. இதைதொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சுரேஷ் விளையாட்டாக உருவாக்கப்பட்ட போஸ்டர் அது என்றும், அந்த போஸ்டர் அஜித் ரசிகர்கள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon