பஜ்ஜி நன்றாக இல்லை எனக் கூறிய கஸ்டமரை டீக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் பாரி முனையும் ஒன்று. இங்கு உள்ள கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் தான் அந்த சம்பவம் நடைபெற்றது.
தற்போது அடைக்கப்பட்டுள்ள ஒரு கடையில் தான் ஞானமணி என்பவர் பஜ்ஜி சாப்பிட்டுள்ளார். வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஞானமணி இதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் தான் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் டீக்கடைக்கு சென்று ஞானமணி. டீயுடன் சேர்த்து பஜ்ஜியை வாங்கி சுவைத்துள்ளார்.
என்னப்பா இது பஜ்ஜி நன்றாகவே இல்லை என ஞானமணி கூற டீ மாஸ்டர் அருணுக்கும் அவருக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டீ மாஸ்டர் அருண் வாழைக்காய் வெட்டும் கத்தியை எடுத்து யைகுத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பூக்கடை காவல் துறையினர் ஞானமணியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தப்பியோடி அருண் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதை பகுதியில் பதுங்கியிருந்த அருணை காவல்துறையினர் கைது செய்தனர்.