இந்தியில் முடியாது.. தமிழில் பேசவா..? – கெத்து காட்டிய டாப்ஸி

தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட பாடல் மூலமாகவும், தனது வெகுளியான நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார் அவர்.

 

இதனை அடுத்து ஜீவாவுடன் வந்தான் வென்றான், அஜித்துடன் ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் கவனத்தை திருப்பினார். அந்தவகையில் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் மற்றும் பட்லா ஆகிய திரைப்படங்களில் நடித்த அவர் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் தனி கவனத்தைப் பெற்றார்.

 

அதன் பின்னர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்த சமீபத்தில் கோவாவில் டாப்ஸி நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட டாப்சியிடம் கூடி இருந்தவர்கள் கலந்துரையாடினர்.

 

படங்கள் மற்றும் பிற விஷயங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்து வந்த டாப்சியிடம் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் டாப்ஸியை ஹிந்தி மொழியில் பேசுமாறு வலியுறுத்தினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தை பார்த்து பேசிய டாப்சி இங்கு உள்ளவர்கள் அனைவருக்கும் ஹிந்தி புரியுமா என கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு பலரும் தெரியாது எனக் கூறி தலையசைக்க தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசினார் டாப்ஸி. ஆனால் கேள்வி எழுப்பிய அந்த நபரோ நீங்கள் ஹிந்தி நடிகை என்பதால் இந்தியில் தான் பேசவேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தினார். இதற்கு பதிலளித்த டாப்ஸி ஹிந்தி மட்டுமில்லாது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிக்கிறேன் என்றும் அப்படி என்றால் தான் இப்போது தமிழில் பேச வா என்று கேள்வி எழுப்பினார்.

 

டாப்ஸியின் பதிலை கேட்ட அந்த நபர் அமைதியாக அரங்கமே கை தட்டி டாப்ஸியின் பதிலுக்கு வரவேற்பு அளித்தது. இதனையடுத்து அமிதாப்பச்சனுடன் நடித்த அனுபவம் தொடர்பான எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டாப்ஸி திரைப்பட நடிப்பு அனுபவம் தொடர்பான கேள்விகளை விடவும் நல்ல கேள்விகளை தான் மக்களிடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

 

இதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமா குறித்து பேசிய டாப்ஸி தென்னிந்திய சினிமா தமக்கு பலவற்றை கற்று கொடுத்துள்ளது என்றும் குறிப்பாக நடிப்பு என்றால் என்ன, கேமரா என்றால் என்ன உள்ளிட்ட சினிமா குறித்த அடிப்படைகளை, தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

 

மேலும் பாலிவுட்டில் நுழைவதற்கான பாதையாக தென்னிந்திய சினிமாவை தான் ஒருபோதும் கருதியது இல்லை என்றும் அது முட்டாள்தனமானது என்றும் தான் தென்னிந்திய சினிமாவை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பணியாற்றுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply