ரஜினிகாந்த் கூறியிருந்த 2021ல் நிகழப்போகும் அந்த அதிசயம் நடிகர் விஜய் என மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் அதிசயம் நிகழும் என கூறியிருந்தார்.
முன்னதாக விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர், ரஜினியும் கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும், பிறகு தம்பிகளுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசியலில் நிகழப்போகும் அந்த அதிசயம் நடிகர் விஜய்தான் என அவரது ரசிகர்கள் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி இருக்கிறார்கள். ரஜினி-கமல் படங்களுக்கு நடுவில் விஜய்யின் புகைப்படம் இருக்குமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. இது சமூக வலைதளங்களில் பரவி புயலைக் கிளப்பியுள்ளது.