மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடர்; தோனிக்கு இடமில்லை!! ஓய்வு அறிவிப்பாரா?

மே. இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில், இந்த முறையும் தோனி இடம் பெறவில்லை. இதனால் அவர் நிரந்தரமாக ஓய்வை அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி வீரராக நுழைந்த மகேந்திர சிங் தோனி, விறுவிறுவென டெஸ்ட், ஒரு நாள் , டி20 என மூன்று விதமான அணிக்கும் கேப்டனாக இருந்து சாதனை படைத்தவர். மிஸ்டர் கூல் என்ற அழைக்கப்பட்ட தோனி, களத்தில் படைத்த சாதனைகள் பல. கேப்டனாக இருந்து ஒரு நாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்.

 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014-ல் ஓய்வு பெற்ற தோனி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டி20 போட்டிகளில் இருந்தும் ஒய்வு அறிவித்தார். கடந்த ஜுன், ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற தோனி சரியாக சோபிக்கவில்லை. வயதும் 37 ஆகி விட்டதால், உலகக் கோப்பை தொடரின் கடைசிப் போட்டியுடன் ஓய்வை அறிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.

 

இதனால் ஜுலை 9-ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்த நிலையில், தோனி ஓய்வு பெறப்போகும் முடிவை அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற பரபரப்பு கூட எழுந்தது. ஆனால் மிஸ்டர் கூல், போட்டி முடிந்தவுடன் அப்படி எந்த முடிவையும் அறிவிக்காமல் கூலாக இருந்து விட்டார்.

இதையடுத்து வயதாகிவிட்டதாலும், ஆட்டத்திலும் விறு விறுப்பான அதிரடி காட்டாததாலும் தோனி ஓய்வு பெறவேண்டும். இல்லையேல் அணியிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்க தொடங்கினர். ஆனாலும் இந்திய கிரிக்கெட் வாரியமோ அணியிலிலிருந்து தோனியை நீக்குவது அவருக்கு அவமானம். எனவே மூத்த வீரரான தோனி தாமாகவே ஓய்வு முடிவை அறிவிப்பது வரை நீக்குவது இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது.

 

இந்நிலையில், திடீரென இந்திய ராணுவத்தின் கவுரவப் பணிக்காக செல்வதாகக் கூறி தோனி ராணுவத்தில் சேர்ந்து ஓரிரு மாதங்கள் பணியாற்றினார்.

 

பின்னர், இந்தியா வந்த தெ.ஆப்ரிக்க அணிக்கான ஒரு நாள் தொடரில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியா வரும் மே.இ.தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3டி 20 தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் ஒரு தொடரில் தோனி இடம் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால் இந்தத் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதிலும் ஒரு நாள் போட்டிக்கான அணி வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம் பெறாதது அவருக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக கூறப் படுகிறது. இதனால் தோனி தமது ஓய்வு முடிவை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.

 

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் :

 

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், ஷமி, தீபக் சாஹர், குமார் .

 

டி.20 போட்டிகளில், ஒரு நாள் அணி வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கேதார் ஜாதவுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.


Leave a Reply