தமிழக அரசியலில், 2021 தேர்தலில் தமிழக மக்கள் அதிசயமும் அற்புதமும் நிகழ்த்துவார்கள் என ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு,2021-ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி மலரும் என்பதையே அவ்வாறு அதிசயம் என கூறியிருக்கிறார் போலும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, கமலுடன் கூட்டணி சேருவது குறித்தும், யார் முதல்வர் என்பது குறித்தும் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில், தமிழக மக்கள் அதிசயம், அற்புதம் நிகழ்த்துவார்கள். இது 100 சதவீதம் உண்மை என தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்தக் கருத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை துத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில்,ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும்.
எந்த அடிப்படையில் 2021-ல் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை.2021-ம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்.
எனவே, 2021-ம் ஆண்டிலும் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம். கடந்த
நாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது; உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.